ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்க காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்! - கல்வி அமைச்சு
- Shan Siva
- 05 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 5: அடுத்த ஆண்டுக்கான தேவைகளை முன்னிட்டு ஆசிரியர் பற்றாக்குறையை
சமாளிக்கும் வகையில், கல்வி சேவைகள் ஆணையமான SPP பட்டியலில் உள்ள காத்திருப்பு (reserve) விண்ணப்பதாரர்களை பணியில் அமர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக
துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
அடுத்த ஆண்டில் அதிகமாக தேவைப்படும்
பாடப்பிரிவுகளுக்கு (subject specialisation) ஏற்ற
தகுதிகள் கொண்ட காத்திருப்பு விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
என்றும் அவர் கூறினார்.
2027 ஆம் ஆண்டில், ஆறு
வயது குழந்தைகள், விருப்பத்தின் அடிப்படையில் 1ஆம்
வகுப்பில் சேர அனுமதிக்கப்படுவதால், இரட்டை மாணவர் தொகுதி (double cohort) உருவாகும் நிலை எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூடுதல்
ஆசிரியர்கள் தேவைப்படும் என அவர் விளக்கினார்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, கல்வி அமைச்சு, கல்வி சேவைகள் ஆணையத்துடன் இணைந்து, CoS எனப்படும் சேவை ஒப்பந்த அடிப்படையில் (Contract of Service – CoS)
20,000 ஆசிரியர்களை நியமிக்க முடிவு
செய்துள்ளது. ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் (IPG) மேற்கொண்ட
முந்தைய கணிப்புகள் ஒரே தொகுதி மாணவர்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன என்று
அவர் தெரிவித்தார்.
2027 ஆம் ஆண்டில் கூடுதல் ஆசிரியர்கள்
தேவைப்படும் நிலையில், பாடப்பிரிவு சிறப்பு இல்லாதவர்களையும் CoS
அடிப்படையில் பணியில் அமர்த்தி, இந்த
ஆண்டிலேயே அடுத்த ஆண்டுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



