பாதுகாப்புப் படைத் தளபதி மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியவர்கள் கைது! - உள்துறை அமைச்சர்
- Shan Siva
- 26 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 26: புக்கிட் காயு ஹீத்தாமில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு
முகமை (AKPS) தளபதி நசாருதீன் நசீர்
ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும்
இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த 24 மணி
நேரத்திற்குள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசாருதீன்
இஸ்மாயில் மக்களவையில் தெரிவித்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து
நாட்டில் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து (PN-Rantau
Panjang நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி ஜைலா யூசோஃப் கேட்ட கேள்விக்கு
பதிலளிக்கும் விதமாக, "விசாரணைகள் நடந்து
வருகின்றன" என்று அமைச்சர் கூறினார்.
காயமின்றி தப்பிய
நசாருதீன், சுபுஹ் தொழுகையை
நிறைவேற்ற தனியாக வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தபோது, கருப்பு நிற உடையணிந்து, மோட்டார் சைக்கிளில் வந்த, முழு முகக் கவசம் அணிந்திருந்த இரண்டு பேர் அவரது வாகனத்தை
நெருங்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த ஆண்டு AKPS இன் புக்கிட் காயு ஹீத்தாம் கிளையால் பதிவு
செய்யப்பட்ட 100 டன் அரிசி மற்றும் பன்றி இறைச்சி உட்பட பறிமுதல் செய்யப்பட்டதற்கு
பழிவாங்கும் விதமாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்ற சாத்தியக்கூறை
போலீசார் நிராகரிக்கவில்லை.
மரணம் அல்லது காயத்தை
ஏற்படுத்தும் நோக்கத்துடன் துப்பாக்கியை பயன்படுத்தியதற்காக 1971 ஆம் ஆண்டு
துப்பாக்கி பிரிவு 3 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்புக தொடர்பான
அச்சுறுத்தல்களில் அரசாங்கம் சமரசம் செய்யாது என்று சைஃபுதீன் வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



