‘வேல் – வேல்’ சர்ச்சை வீடியோ வெளியிட்டவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4: தைப்பூச காவடி சடங்கை கேலி செய்யும் சர்ச்சைக்குரிய வீடியோவில் இடம்பெற்ற எரா எஃப்எம் (ERA FM)  வானொலி தொகுப்பாளர்களை ஆஸ்ட்ரோ ஆடியோ இடைநீக்கம் செய்துள்ளது.

தைப்பூசத்தின் போது முருக பக்திக்காக நிகழ்த்தப்படும் புனிதமான இந்து செயலை கேலியாக்கி வீடியே வெளியிட்ட  3 பாகி எரா நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் இடம்பெற்ற வீடியோ தொடர்பான மேலும் இரண்டு ஊழியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஆஸ்ட்ரோ ஆடியோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து முழுமையான உள் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருவதாகவும், அதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மூத்த நிர்வாகம் இன்று முன்னதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய (எம்சிஎம்சி) அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் ஆஸ்ட்ரோ ஆடியோ தெரிவித்துள்ளது.

தங்களது மூன்று எரா வானொலி அறிவிப்பாளர்கள், பல்வேறு தரப்பினருக்கு மன உளைச்சலையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்திய சம்பவம் குறித்து ஆஸ்ட்ரோ ஆடியோ மீண்டும்  ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளது.

 அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகள், கவலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஏற்றுகொள்வதாகவும், வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அது கூறியது!

Astro Audio telah menggantung tiga penyampai Era FM serta dua lagi kakitangan berhubung video kontroversi yang didakwa mempersendakan upacara kavadi Thaipusam. Syarikat itu sedang menjalankan siasatan dalaman dan telah bertemu dengan MCMC. Astro Audio juga memohon maaf atas insiden tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *