ஹிஷாமுடின் -கைரி உட்பட ஆயிரக்கணக்கானோர் அம்னோவில் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,  ஏப் 18: அம்னோ இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் கைரி ஜமாலுதீன் மீண்டும் அம்னோவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.  அதே நேரத்தில் முன்னாள் உதவித் தலைவர் ஹிஷாம்முதீன் ஹுசைனின் இடைநீக்கம் நீக்கப்பட்டுள்ளது என்று அம்னோ பொதுச்செயலாளர் அஷ்ரஃப் வாஜ்டி  டுசுகி தெரிவித்தார்.

"ரூமா பாங்சா" முன்முயற்சியின் கீழ் கட்சியின் உச்ச மன்றத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் கூறினார்.

2018-ல் அம்னோவிலிருந்து பெர்சத்து கட்சிக்குச் சென்ற முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள 6,252 முன்னாள் உறுப்பினர்களும் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

15-வது பொதுத் தேர்தல் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கையைத் தொடர்ந்து கைரி 2023 ஜனவரியில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார், அதே நேரத்தில் செம்ப்ராங் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிஷாம்முதீன், கட்சி ஒழுக்கத்தை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக 2023-ல் ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *