பாஸ் பொதுக் கூட்டத்தில் யார் பிரதமர் என்பதே மையமாக இருக்கும்! - ஆய்வாளர் கருத்து
- Shan Siva
- 11 Sep, 2025
கோலாலம்பூர், செப் 11: பாஸ் தனது 71வது முக்தாமரை இன்று தொடங்கத் தயாராகி வரும் நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான பெர்சாத்துவில் காணப்படும் வெளிப்படையான பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, 16வது பொதுத் தேர்தலுக்கான (GE16) பெரிகாத்தான் நேஷனலின் (PN) பிரதமர் வேட்பாளர் விவகாரம் மையமாக மாறும் என்று அரசியல் ஆய்வாளரும், இல்ஹாம் மையத்தின் நிர்வாக இயக்குனருமான ஹிசோமுதீன் பக்கர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை மாதம்,
எதிர்க்கட்சி கூட்டணியில் தலைமை தாங்க பாஸ்
மறுத்துவிட்டதாகவும், பெர்சாத்து
தலைவர் முகிதீன் யாசின் தலைமையில் இருக்க அனுமதிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்ட
நிலையில், அண்மைய நிலைப்பாடுகள் பாஸ் கட்சியை மறுபரிசீலனை செய்ய
வைத்திருக்கலாம் என்று அவர் கூறினார்.
முன்னாள்
பிரதமரான முகைதீன், கடந்த வாரம் பெர்சாத்துவின்
வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சனிக்கிழமை பெர்சாத்து
பொதுக்குழுவில் அவர் ஆற்றிய உரையில், சிலர் தன்னைப் பதவி நீக்கம் செய்யும் முயற்சியில் கையெழுத்துக்களை சேகரித்து
வருவதாகக் கூறினார்.
பின்னர் ஒரு
சலசலப்பு வெடித்தது. முகைதீனுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுந்தன.
இப்போது, பாஸ் கட்சி பிரதமர் வேட்பாளராக வேறொரு தலைவரை
அறிவிக்க விரும்புவதாக ஊகங்கள் பரவி வருகின்றன. ஆனால் பெர்சாத்து முகைதீன்தான்
கட்சியின் தேர்வு என்று உறுதிப்படுத்தியுள்ளது.
முகைதீன் தான் பிரதமர்
வேட்பாளரா? இல்லை அவர் தவிர்க்கப்படுவாரா? என்பது பாஸ் கட்சியின் கூட்டத்தில்தான் தெரிய வரும் என்கிற
நிலையில், பரபரப்போடு காத்திருக்கின்றனர் பெரிக்காத்தான்
பங்காளிகள்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



