தேசிய பாதுகாப்புக்கு ஊறு; வெளிநாட்டு உளவு முயற்சிகளை தடுக்கும் நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக.22-

வெளிநாட்டு தரப்புகளின் உளவு முயற்சிகள் தேசிய உளவு முயற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதை மிகக் கவனமாக கருத்தில் கொண்டு, உள்துறை அமைச்சு, அதனைக் கையாள தடுப்பு மற்றும் தலையீட்டு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டு வருகிறது.

அனுமதியின்றி முக்கியமான தகவல்களைப் பெறுவது உட்பட உளவு நடவடிக்கைகள், உலகின் பிற நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப, விரிவான முறையில் கையாள வேண்டிய பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருதப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் கூறியுள்ளார்.

"இந்த உளவு நடவடிக்கைக்கு ஒரு சிறப்பு செயல்முறை உண்டு. முதலில், அவர்கள் இலக்கை அடையாளம் காண்பதிலிருந்து தொடங்குவார்கள். பின்னர் தகவல்களைச் சேகரித்து, நிறுவன கட்டமைப்பைப் புரிந்துகொண்டு உள்ளேயே ஒருவரை சேர்ப்பார்கள். அல்லது சுற்றுப் பயணிகள் உட்பட பல்வேறு வழிகளில் ஊடுருவத் தொடங்குவார்கள்.

உள்ளேயுள்ள நபரைச் சேர்த்துக் கொள்ளும்போது, சிலருக்கு பலன்கள் அளிப்பதாக வாக்குறுதி தருவார்கள். சிலர் மிரட்டல் அல்லது அழுத்தத்தால் இணைந்துவிடுவார்கள்.சிலரின் மனதில் தங்கள் சிந்தனையை விதைத்து, அதன்மூலம் ஆட்சேர்ப்பு செய்வதும் உண்டு", என்றார் அவர்.

நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் வகையிலான உளவு நடவடிக்கைகளைத் தடுக்கவும் கையாளவும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில், லுபோக் ஹந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரோய் அங்காவ் எழுப்பிய கேள்விக்கு டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் அவ்வாறு பதிலளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *