புலியை வேட்டையாடிய மூவருக்கு தலா RM 250,000 அபராதம்! ஏழு ஆண்டுகள் சிறை!
- Shan Siva
- 23 Sep, 2025
கோலாலம்பூர், செப் 23: சிறப்பு அனுமதியின்றி புலியின் சடலத்தை வைத்திருந்ததற்காக கோத்தா திங்கி அமர்வு நீதிமன்றம் ஆடவர் மூவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா RM250,000 அபராதமும் விதித்துள்ளது.
நீதிபதி ஹைதா
ஃபரிட்சல் அபு ஹசன் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, ஷாஹீசாம் சலீம் (49), சகோதரர்கள் நசெரின் டோமிரான் (47), நஸ்ரோல் டோமிரான் (28) ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
வனவிலங்கு
பாதுகாப்புச் சட்டம் 2010 இன் பிரிவு 70(1)
இன் கீழ், சிறப்பு அனுமதியின்றி முற்றிலும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு
இனத்தைச் சேர்ந்த புலியை வேட்டையாடியதற்காக அல்லது வைத்திருந்ததற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்து இந்த குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டது.
தங்களது வாகனத்தின்
பின்புற பெட்டியில் விலங்கின் சடலத்தை வைத்திருந்ததாக மூவர் மீதும் கூட்டாக
குற்றம் சாட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 10
ஆம் தேதி காலை 6.10 மணியளவில் ஜொகூர், மெர்சிங்கில்
உள்ள ஃபெல்டா தெங்காரோவில் இந்தக் குற்றம்
நடந்ததாகக் கூறப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



