பந்திங் அருகே விபத்து, மூவர் பலி!
- Shan Siva
- 23 Aug, 2025
ஷா ஆலம், ஆக 23: பந்திங்கில் உள்ள ஜாலான் சுல்தான் சுலைமான் ஷாவில் இன்று அதிகாலை, கார் சறுக்கி பள்ளத்தில் மோதியதில் மூன்று பேர் பலியாகினர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து
அதிகாலை 3.56 மணிக்கு
துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், அனைவரும்
உள்ளூர்வாசிகள் என்றும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி
இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து,
பந்திங் தீயணைப்பு மற்றும் மீட்பு
நிலையத்திலிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
காரில் சிக்கியவர்கள்
அதிகாலை 4.20 மணி முதல்
அதிகாலை 5.15 மணி வரை
இடிபாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் மூன்று
பேர் இறந்த நிலையில் காணப்பட்டனர், மற்ற மூவருக்கு
தலை, உடல் மற்றும் கால்களில்
காயம் ஏற்பட்டது, மேலும்
சிகிச்சைக்காக பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் இன்று
ஒரு அறிக்கையில் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



