கழிப்பறை வழியாக கடைக்குள் புகுந்து RM 90,000 மதிப்புள்ள கைப்பைகள் திருட்டு! மூவருக்கு போலிஸ் வலைவீச்சு
- Shan Siva
- 13 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 13: சைபர்ஜெயாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருந்த ஆடம்பர கைப்பைகள் விற்கும் கடைக்குள் புகுந்து, RM90,000 மதிப்புள்ள 25 கைப்பைகளைத் திருடிச் சென்றதாக நம்பப்படும் மூன்று பேரை காவல்துறை தேடி வருகிறது.
கழிவறை ஜன்னலை உடைத்து திருடர்கள் கடைக்குள் நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிப்பாங் காவல்துறைத் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமன் தெரிவித்தார்.
கறுப்பு நிற உடை அணிந்து முகமூடி அணிந்த மூன்று நபர்கள் கடையைச் சூறையாடி, அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த கைப்பைகளை எடுத்துச் செல்வது சிசிடிவி காட்சிகளில் தெரிகிறது என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதைக் குறிப்பிட்ட நோர்ஹிஸாம், இந்த வழக்கு குறித்த தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



