கோழி எலும்புகளைக் கொடுத்த மூவர் போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 9-

வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகளை கொடுத்ததாக நம்பப்படும் மூவர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.அவர்களின் அத்தகையை செயல் தொடர்பான ஒரு காணொளி பரவலாகப் பகிரப்பட்ட பின்னர் அம்மூவரும் பொதுமக்களின் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகினர்.

வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை ஜொகூரிலில் இருந்து சிரம்பானுக்குக் கொண்டு வரப்பட்ட 14, 18 மற்றும் 19 வயதுடைய அம்மூவரும், அங்கு ஒரு நாளுக்குத் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் புதன்கிழமை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக, சிரம்பான் போலீஸ் தலைவர் ஹத்தா சே டின் தெரிவித்தார்.

“அச்சம்பவம் தொடர்பில் சிரம்பான் மாவட்டத்தில் ஒரு போலீஸ் புகார் செய்யப்பட்டது என்று, சிரம்பானில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஹத்தா தெரிவித்தார்."வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக ஜொகூரிலிருந்து அழைத்து வரப்பட்ட அவர்கள் மூவரிடமும் செவ்வாய்க்கிழமை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் நேற்றுமுன்தினம் புதன்கிழமை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்” என்று அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம், குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 504 மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்முனை தகவல் சட்டத்தின் செக்ஷன் 233
மற்றும் 1955ஆம் ஆண்டு சிறார் குற்றங்கள் சட்டத்தின் செக்ஷன் 14 ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஹத்தா கூறினார்.

அச்சம்பவம் தொடர்பிலான காணொளி பகிரப்பட்டது தொடர்பில், அம்மூவரிடமிருந்து, மலேசிய தொடர்பு மற்றும் பல்முனை ஆணையமும் வாக்குமூலங்களைப் பெற்றிருப்பதாக கூறப்பட்டது.

சுமார் இரண்டு நிமிடங்கள் கொண்ட அக்காணொளி பல டிக்டோக் பயனீட்டாளர்களினாலும் பகிரப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அம்மூவரும் பொரித்த கோழித் துண்டுகளை சாப்பிட்ட பின்னர் கோழி எலும்புகளை, சோற்றுப் பொட்டலத்தில் வைத்து மடித்து நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த வீடற்ற ஒருவரிடம் கொடுத்த காட்சி அக்காணொளியில் பதிவாகி இருக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *