மூன்று மேலவை உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்!
- Muthu Kumar
- 26 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 26-
மூன்று மேலவை உறுப்பினர்கள் அதன் தலைவர் டத்தோ அவாங் பெமி அவாங் அலி பாசா முன்னிலையில் நேற்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கெஅடிலான் ரெம்பாவ் கிளை தலைவர் டாக்டர் ஜூஃபித்ரி ஜோஹா, ஜசெக உச்சமன்ற உறுப்பினர் டத்தோ வூ ஹிம் வென் மற்றும் ஜசெக மூத்த உறுப்பினர் டத்தோ லியோங் கா ஆகியோர் அந்த மூவர் ஆவர்.
டாக்டர் ஜூஃபிதரி, ஆகிய இருவரையும், நேற்று தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் நியமித்த வேளையில், லியோங்கை, நேற்று தொடங்கி 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி வரைக்குமான காலகட்டத்திற்கு. மாட்சிமை தங்கிய மாமன்னர் நியமித்தார்.
அவர்கள் மூவருக்கும் மேலவைத் தலைவர் அவாங் பெமி தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
"அவர்கள் மாநிலத்தையும், மலேசியாவின் மிக உயர்ந்த சட்டமன்ற அமைப்பான இங்கு பேச நியமிக்கப்பட்ட குழுக்களையும் பிரதிநிதிக்கிறார்கள். அதிகாரங்களைப் பிரிக்கும் கொள்கையின் அடிப்படையில் நிர்வாகத்தையும் மக்களவையையும் சரிபார்த்து சமநிலைப்படுத்துவதில் அவர்கள் பங்களிக்கிறார்கள். என்றார் அவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



