டாடா பட இயக்குனருடன் கை கோர்க்கும் துருவ்!
- Muthu Kumar
- 22 Oct, 2025
தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் சொந்த வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் மற்றும் 30 வருடங்களுக்கு முன்பு இரு சாதி தலைவர்களுக்கு இடையே இருந்த மோதல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பைசன் படத்தை எடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
இந்த படத்திற்கு துவக்கம் முதலே பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது.சில எதிர்ப்புகள் வந்தாலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். நான்கு நாட்களில் இப்படம் 20 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.
இந்த படத்தின் மூலம் துருவ் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். பல இயக்குனர்களும் துருவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் அடுத்து கவினை வைத்து டாடா படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு இயக்கத்தில் துருவ் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர் ரகுமானிடம் பேசி வருகிறார்கள். ஜி.வி பிரகாஷை வைத்து 'அடியே' என்கிற படத்தை தயாரித்த நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



