அனைத்துலக உறவுகள் வலுவாக உள்ளது – பிரதமர் அன்வார் இப்ராஹிம்
- Surendran Sumdraraj
- 09 Apr, 2026
புத்ராஜெயா, ஏப். 9-
உலகளாவிய மோதல்கள் நிலவும் சூழலிலும் மலேசியாவின் சர்வதேச உறவுகள் நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதில் முக்கியமான சொத்தாக தொடர்கின்றன என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
உலகத் தலைவர்களுடன் உருவாக்கப்பட்டுள்ள நட்பு வலையமைப்பு, சர்வதேச பிரச்சினைகளைத் திறம்பட சமாளிக்க மலேசியாவுக்கு உதவுவதோடு, மக்களின் நலன்களையும் பாதுகாக்க உதவுகிறது என்று அவர் சொன்னார்.
உதாரணமாக, மலேசியா மற்றும் ஈரான் இடையிலான நல்லுறவு, நாட்டின் வர்த்தக நலன்களை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, மலேசிய வர்த்தக கப்பல்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கும் இந்த உறவு ஆதரவாக இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், ஈரான் அதிபருடன் நடந்த சந்திப்பில், மலேசிய கப்பல்கள், அதில் PETRONAS கப்பல்களும் உட்பட, Selat Hormuz வழியாக பாதுகாப்பாக செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது என பிரதமர் கூறினார்.
இந்த உறுதிமொழி, உலகளாவிய பதற்றநிலைகளில் கூட மலேசியாவின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க முக்கிய பங்காற்றும் என அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



