தொடரும் கனமழை – பகாங், திரங்கானு, ஜொகூர் உட்பட பல மாநிலங்களுக்கு எச்சரிக்கை
- Tamil Malar (Reporter)
- 17 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 17-
மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) வெளியிட்டுள்ள தகவலின்படி, நாளை (18 டிசம்பர் 2025) வரை குறிப்பாக பகாங், திரெங்கானு, ஜொகூர் மாநிலங்களில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபத்து நிலை (BAHAYA) எச்சரிக்கை: பகாங் மாநிலத்தின் குவாந்தான், பெக்கான், ரொம்பின் பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை பெய்யும். வெள்ள அபாயம் மிக அதிகம் உள்ளது.
மோசமான நிலை (BURUK) எச்சரிக்கை: திரங்கானு (டுங்குன், கெமாமான்); பகாங் (ஜெராந்துத், மாரான், பேரா); ஜோகூர் (செகாமாட், குளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி) ஆகிய பகுதிகளில் நாளை வரை கனமழை தொடரும். வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எச்சரிக்கை நிலை (WASPADA): கிளந்தான்; திரங்கானு (பெசுட், செத்தியு, கோலா நெருஸ், ஹுலு திரங்கானு, கோலா திரங்கானு, மாராங்); பகாங் (கேமரன் மலை, லிப்பிஸ், ராவுப், பெந்தோங், தெமெர்லோ); சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய இடங்களிலும் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



