ஜொகூர் உட்பட ஐந்து மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 11-

ஜொகூர் மாநிலத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஜொகூர் உட்பட ஐந்து மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று மதியம் 12 மணி வரை அமலில் இருக்கும் என MetMalaysia தெரிவித்தது.

ஜொகூர் மாநிலத்தில் தங்காக், மூவார், பத்து பாகாட், பொந்தியான், கூலாய் மற்றும் ஜொகூர் பாரு ஆகிய மாவட்டங்கள் இந்த எச்சரிக்கையின் கீழ் உள்ளன.

இன்று ஜொகூர் மாநிலத்தில் 56 சட்டமன்ற இடங்களுக்கான புதிய மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதனால், வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் போது வானிலை நிலைமையைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என நினைவூட்டப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *