சட்டபூர்வமான தண்டனையாக ‘பிரம்படி’ – கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்பு
- Surendran Sumdraraj
- 22 Apr, 2026
புத்ராஜெயா, ஏப். 22-
மலேசியாவில் பிரம்படி(sebat) தண்டனை அரசியலமைப்பிற்கு உட்பட்ட சட்டபூர்வமான தண்டனையாகும் என்று Mahkamah Persekutuan இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி Wan Ahmad Farid Wan Salleh தலைமையில் அமர்ந்த நீதிபதிகள் குழு 2-1 என்ற பெரும்பான்மை தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பை வாசித்த அவர், இந்த தண்டனை Perkara 5 Perlembagaan Persekutuan மற்றும் Perkara 8 Perlembagaan Persekutuan ஆகியவற்றை மீறுவதில்லை என்று தெரிவித்தார்.
Perkara 5 உயிர் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை உறுதி செய்கிறது; அதேவேளை Perkara 8 சட்டத்தின் முன் சமத்துவத்தையும் பாகுபாடு இல்லாத பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
இந்த தீர்ப்பு, மூன்று கைதிகள் தாக்கல் செய்த சட்ட சவாலின் பின்னணியில் வந்ததாகும். அவர்கள், பிரம்படி தண்டனை உயிருக்கு ஆபத்தானது மற்றும் சீரற்ற (arbitrary) முறையில் வழங்கப்படுகிறது என்ற காரணத்தால் அதை ரத்து செய்ய கோரி Kaedah 137 Kaedah-Kaedah Mahkamah Persekutuan கீழ் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், நீதிமன்றம் அந்த வாதங்களை நிராகரித்து, நிலவும் சட்டத்தின் கீழ் இந்த தண்டனை அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே தொடரும் என்று உறுதி செய்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



