ரூ.1.80 கோடி மோசடி புகார்; நடிகர் ஆர்யா மீது வழக்குப்பதிவு

top-news
FREE WEBSITE AD

ஐதராபாத், ஜூலை 13-

ரூ.1.80 கோடி மதிப்பிலான பண மோசடி புகாரின் அடிப்படையில், நடிகர் ஆர்யா மீது ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் திரைப்பட உபகரணங்கள் வாடகை நிறுவனம் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அனந்தன் காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக உயர்தர கேமராக்கள், லென்ஸ்கள், விளக்கு சாதனங்கள், கிரிப் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டதாக அந்த நிறுவனம் புகாரில் குறிப்பிட்டுள்ளது.

அவற்றுக்கான வாடகை மற்றும் சேவைக் கட்டணமாக ரூ.1.80 கோடி நிலுவையில் இருந்தும், பலமுறை கேட்டும் பணம் செலுத்தப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த புகாரைத் தொடர்ந்து, ஜூபிலி ஹில்ஸ் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை நடத்தி, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் வினோத் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதி கிஷோர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *