நீதிபதிகளுக்கு ஏன் சம்பள உயர்வு? – அன்வார் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜான் 5: நீதிபதிகள் உட்பட அரசுப் பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவு, எந்தவொரு தரப்பின் அழுத்தத்தினாலும் அல்ல; அவசியத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பிரதமர் துறை மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசுப் பணியாளர்களுக்கான கடைசி ஆண்டு சம்பள திருத்தம் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகவும், அதே நேரத்தில் பொறுப்புகள் மற்றும் பணிச்சுமை பெரிதும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

நீதிபதிகளுக்கான சம்பள உயர்வு ஏன் 30 சதவீதம் என சிலர் கேட்கிறார்கள்.
அதற்குக் காரணம், 2015 முதல் இதுவரை எந்த மறுபரிசீலனையோ, ஆண்டு உயர்வோ இல்லை. முந்தைய சம்பளங்கள் குடும்பத்தின் அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் அளவில்தான் இருந்தன என்று அன்வார் விளக்கினார்.

இந்த சம்பள உயர்வு திட்டத்தால் அரசாங்கத்திற்கு மொத்தம் RM18 பில்லியன் செலவாகும் என்றும், இது அரசுப் பணியாளர்களின் அதிகரித்த பணிச்சுமையை அங்கீகரித்து, நியாயத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பளம் உயர்ந்துள்ள நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளும் உயர்ந்துள்ளன என்று கூறிய பிரதமர், அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் வேகமான, திறமையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசுப் பணியாளர்களின் சம்பளம் உயரும்போது, மக்கள் வேகமான மற்றும் தரமான சேவையை எதிர்பார்ப்பது நியாயமே. தாமதங்கள், மீண்டும் மீண்டும் செய்யப்படும் ஆவணப் பணிகள், துறைமுறை தடைகள் ஆகியவற்றை நாம் சரி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், அரசு செயல்பாடுகளில் டிஜிட்டல் முறைமைகளை அதிகளவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், நேரத்தைச் சேமித்து சேவைத்தரத்தை உயர்த்த AI தொழில்நுட்பத்தை (வரைவுப் பதில்கள், ஆன்லைன் செயல்முறைகள் போன்றவை) பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால், சட்டப்பூர்வ தேவைகள் உள்ள இடங்களில் மட்டும் விதிவிலக்கு பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *