அமினுலும்,ருஹூலும் எதற்கு நாடு கடத்த வேண்டும்-சைஃபுடின் நசுத்தியோன் !
- Muthu Kumar
- 11 Nov, 2024
பெஸ்டினெட் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் தோற்றுநர் அமினுல் இஸ்லாமையும் அவரின் சகாவான ருஹூல் அமினையும் வங்காளதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.அவர்களை எதற்காக நாடு கடத்த வேண்டும் என்பதை வங்காளதேச அரசாங்கம் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் நேற்று வலியுறுத்தினார்.
விசாரணை நடத்துவதற்காக அவர்கள் அழைக்கப்படுகின்றனரா அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படுவதற்காக அழைக்கப்படுகின்றனரா என்பதை டாக்கா (வங்காளதேச அரசாங்கம்) விளக்க வேண்டும் என்று சைஃபுடின் கூறினார்.அமினுலும் ருஹூலும் எதற்காக வங்காளதேசத்திற்கு அனுப்பப்பட வேண்டும் எனும் விவரம் நாடு கடத்தல் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்படவில்லை. நோக்கம் என்ன என்பதை அது தெரிவிக்க வேண்டும்.
புலன்விசாரணை நடத்துவதாக இருந்தால், பரஸ்பர சட்ட வழிமுறையை அந்நாடு பின்பற்ற வேண்டும். நீதிமன்றத்தில் குற்றம் சுமத்துவதாக இருந்தால் அதற்கான காரணத்தை அது தெரிவிக்க வேண்டும். குற்றம் சுமத்துவதாக இருந்தால் மட்டுமே நாடு கடத்தப்படுவார்கள் என்றார் சைஃபுடின்.அவ்விரு நபர்களும் கள்ளப்பணப் பரிமாற்றம், மிரட்டிப் பணம் பறித்தல், குடியேற்றத் தொழிலாளர்கள் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதால் அவர்களைக் கைது செய்து வங்காளதேசத்திற்கு அனுப்பி வைக்கக்கோரி அந்நாட்டுப் போலீசார் புத்ரஜெயாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் என்று புளூம்பெர்க் செய்தி ஊடகம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *