“என்னிடம் அகந்தை கிடையாது; அனைவரையும் மதிப்பவள் நான்” – நடிகை ஸ்ரீலீலா

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூன் 26 –

தன்னைப் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை ஸ்ரீலீலா விளக்கம் அளித்துள்ளார். “என்னிடம் அகந்தை என்ற குணமே கிடையாது. அனைவரையும் மதித்து நடப்பவள் நான்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரீலீலா, ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது நடிகர் தனுஷுடன் ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில், தனக்கு இணையாக ஆட எந்த நடிகரோ, நடிகையோ இல்லை என்று அவர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

இந்த தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஸ்ரீலீலா, “அகந்தை எப்போதுமே என்னிடம் கிடையாது. நான் அப்படி வளர்க்கப்படவும் இல்லை. எல்லோரையும் மதிப்பவள் நான். எனவே இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். என்னை நன்கு அறிந்தவர்களுக்கு என் குணம் தெரியும்,” என்று கூறியுள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *