17 வயதில் நக்சலைட் இயக்கத்தில் சேர நினைத்தேன் - பவன் கல்யாணின்

top-news
FREE WEBSITE AD

ஹைதராபாத், ஜூன் 13 –

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், தனது 17 வயதில் நக்சலைட் இயக்கத்தில் சேர வேண்டும் என்ற தீவிர எண்ணம் இருந்ததாகத் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய பேட்டியில் தனது இளமைக்கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், 17 முதல் 21 வயது வரை சமூக அநீதிகளைக் கண்டு மிகுந்த கோபமும் ஆவேசமும் கொண்டிருந்ததாகவும், அந்த உணர்வின் காரணமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியதாகவும் கூறினார்.

அப்போது தனது மூத்த சகோதரரும் நடிகருமான சிரஞ்சீவி கேட்ட ஒரு கேள்விதான் தனது வாழ்க்கையின் பாதையை மாற்றியதாகப் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். “உனக்கு குடும்பப் பொறுப்புகள் இருந்திருந்தால் இதே முடிவை எடுத்திருப்பாயா?” என்ற சிரஞ்சீவியின் கேள்விக்கு தன்னால் பதில் சொல்ல முடியவில்லை என்றும், அந்த சிந்தனையே தனது மனநிலையை மாற்றியதாகவும் அவர் கூறினார்.

மேலும், நக்சலைட் இயக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்ததோ அல்லது ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதோ இல்லை என்றும், இளமைப் பருவத்தின் உணர்ச்சி வசப்பட்ட சிந்தனைகளையே தற்போது வெளிப்படையாக பகிர்ந்துகொள்வதாகவும் அவர் விளக்கியுள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *