14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நீரிழிவு! சுகாதார அமைச்சு கவலை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 16: பொதுவாக பெரியவர்களிடம் காணப்படும் வகை 2 நீரிழிவு நோய், தற்போது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமும் கண்டறியப்படுகிறது என்று சுகாதார அமைச்சர் சுல்கெஃப்லி அஹ்மத் இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பேசிய சுல்கெஃப்லி, இந்தப் போக்கு கவலையளிப்பதாகவும், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக இரத்த சர்க்கரை அளவு உள்ளிட்ட தொற்றா நோய்கள் (NCDs) இளம் வயதினரிடையே அதிகரித்து வருவதை இது பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

தேசிய சுகாதார பரிசோதனை முன்னெடுப்பின் NHSI தரவுகள், தொற்றா நோய்களும் அவற்றின் ஆபத்துக் காரணிகளும் இளம் வயதினரை அதிகளவில் பாதித்து வருவதைக் காட்டுவதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு NHSI-இன் கண்டுபிடிப்புகள், பல இளைஞர்கள் தங்களுக்கு தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதை அறியாமல் இருப்பதையும் காட்டுவதாகவும், இது முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தீவிரமான சுகாதாரத் தலையீடுகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாகவும் சுல்கெஃப்லி கூறினார்.

பரிசோதிக்கப்பட்ட 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 347,813 நபர்களில், 341,257 பேர், அதாவது 98.1%, தொற்றா நோய்கள் இருந்ததற்கான எந்த வரலாறும் இல்லாதவர்கள் என்றும், தங்களுக்கு ஆபத்து இருப்பதை அறியாதவர்கள் என்றும் அவர் கூறினார்.

அந்த எண்ணிக்கையில், 11,751 நபர்களுக்கு, அதாவது 3.4% பேருக்கு, உயர் இரத்த சர்க்கரை அளவு இருப்பது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில், 9,000-க்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவு நோயும், 30,170 பேருக்கு உயர் இரத்த அழுத்தமும் இருப்பது கண்டறியப்பட்டது  என்று அவர் கூறினார்.

30 வயதுக்குட்பட்ட நபர்களிடையே காணப்படும் தொற்றா நோய்கள், குறிப்பாக நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் பற்றி GPS கட்சியைச் சேர்ந்த Betong நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ராபு எழுப்பிய கேள்விக்கு ஜுல்கெஃப்லி பதிலளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *