செவ்வாயில் பிரம்மாண்ட கடற்கரை - வியக்க வைக்கும் நாசாவின் கண்டுபிடிப்பு!
- Muthu Kumar
- 06 Feb, 2026
நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அலைகள் வந்து மோதிய பழங்கால கடற்கரையை கண்டறிந்துள்ளது. இது உலக அளவில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், செவ்வாய் கிரகம் குறித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து நம் சிந்தனைப் பூங்காவில் பார்க்கலாம்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை சோதனை செய்ய ஜெஸீரோ கிரேட்டர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரோவர் அங்குள்ள பாறைகளை ஆராயும்போது அவை அலைகளால் அரிக்கப்பட்டு உருண்டையாக மாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் பிரம்மாண்ட ஏரியின் கரையாக இருந்திருக்கிறது என்பதை காட்டும் விதமாக அது அமைந்துள்ளது.
முன்னதாக லண்டனை சேர்ந்த இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வின்படி, செவ்வாய் கிரகம் ஒரு காலக்கட்டத்தில் பூமியை போலவே இதமான காலநிலையையும், ஓடும் நீரையும் கொண்டு இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அங்கு கண்டறிப்பட்ட கார்பனேட் தாதுக்கள், பண்டைய காலத்து தகவல்களை தங்களுக்குள் சீல் செய்து வைக்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.
பூமியிலும் இதேபோல நீர்நிலைகளுக்கு அடியே நுண்ணுயிர்கள் வாழ்வது வழக்கம். எனவே செவ்வாயிலும் ஒரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த நிலையில், தற்போது செவ்வாயின் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் என்பது ஒரு வறண்ட கிரகம் மட்டுமன்றி முந்தைய காலக்கட்டத்தில் அங்கு உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



