2 பெண் பிள்ளைகளையும் கைவிட்ட தாய்! காதலனையும் கைது செய்த காவல்துறை!

top-news

ஜூன் 6,

பூச்சோங்கில் கைவிடப்பட்ட நிலையில் 4 வயது 16 வயது என இரு பிள்ளைகளும் பொதுமக்களால் மீட்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளிந் தாயாரையும் அவரின் காதலனையும் காவல்துறை கைது செய்திருப்பதாக Subang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார். 37 வயதுள்ள தாயார் இரு பிள்ளைகளையும் கைவிட்டு, தனது 42 வயது காதலனுடன் வாழ முடிவு செய்ததால் பிள்ளைகளைத் துரத்திவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

4 வயது தனது தங்கையுடன் 16 வயது இளம்பெண் பூச்சோங்கில் உள்ள சமூகநலத்துறையிடம் புகார் அளித்ததாக Subang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார். கைது செய்யப்பட்ட தாயின் கணவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதைக் காவல்துறை கண்டறிந்திருப்பதாகவும் 8 முந்தைய வழக்குகளாகத் தேடப்படும் குற்றவாளி என தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் ஜூன் 10 வரையில் 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட 4 வயது 16 வயது இரு பிள்ளைகளும் சமூகநலத்துறையின் பாதுகாப்பில் இருப்பதாகவும் Subang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.

Seorang ibu berusia 37 tahun dan teman lelakinya ditahan selepas meninggalkan dua anak perempuan berusia 4 dan 16 tahun di Puchong. Polis mengesahkan si ibu memilih untuk tinggal bersama teman lelakinya dan mengabaikan anak-anaknya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *