விபத்தில் தாயும் சிறுவனும் பலி! 6 பேர் படுகாயம்!

top-news

ஜூன் 13,


கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியானதுடன் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அதிகாலை 5.30 மணிக்குப் பகாங் லிப்பிஸில் உள்ள Kampung Chegar Perah அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாக LIPIS மாவட்டக் காவல் ஆணையர் Ismail Man தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் ஒரு பெண்ணும் சிறுவனும் உயிரிழந்ததாகத் தெரிய வந்துள்ளது.

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை மோதியதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் 50 வயது Roslawati Mat Daud, 6 வயது Aqif Azfar Azman உயிரிழந்திருப்பதாகவும் வாகனத்திலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில் LIPIS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கிள்ளானிலிருந்து கிளாந்தானுக்குச் சென்றுக் கொண்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது. விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநரிடம் விசாரணையை மேற்கொண்டு வருவதாக LIPIS மாவட்டக் காவல் ஆணையர் Ismail Man தெரிவித்தார்.


Dua beranak maut dan enam ahli keluarga cedera selepas kenderaan mereka melanggar belakang lori yang berhenti di tepi jalan di Kampung Chegar Perah, Lipis, Pahang. Mangsa dalam perjalanan dari Klang ke Kelantan. Polis menyiasat pemandu lori terbabit.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *