4 வயது மகனுடன் தற்கொலைக்கு முயற்சி தாய் மீட்பு!
- Thinagaren Sanggaren
- 22 Jul, 2025
ஜூலை 22,
மன அழுத்தத்திற்குள்ளான
தாய் தனது 4 வயது மகனுடன் பாலத்திலிருந்து விழுந்து தற்கொலைக்கு முயற்சி நிலையில் பொதுமக்களால்
பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 11.10 மணியளவில் கிளாந்தான்
கோத்தா பாருவில் உள்ள Sultan Yahya Petra பாலத்தில் நிகழ்ந்ததாகக்
Kota Darul Naim மாவட்ட மீட்பு
ஆணைய இயக்குநர் Suhaimi
Othman தெரிவித்தார். இரவு 11.10 மணியளவில் பொதுமக்களிடமிருந்து
அவசர அழைப்பைப் பெற்றதும் 11.20 மணிக்கு மீட்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக
Suhaimi Othman தெரிவித்தார்.
சுமார் 20 நிமிடங்கள்
பேச்சு வார்த்தைக்குப் பின்னர் 35 வயதான பெண்ணையும் 4 வயது மகனையும் சமாதானப்படுத்தி
மீட்டதாகவும் Suhaimi
Othman தெரிவித்தார். தனது 4 வயது மகனுடன் மோட்டார்
சைக்கிளில் வந்த 35 வயது பெண் பாலத்தில் நின்று குதிக்க முற்பட்ட போது வாகனமோட்டிகள்
அவரைத் தடுத்து சமாதானப்படுத்தும்படியான கட்சி சமூகவலைத்தலங்களில் பரவியது. தற்போது
35 வயது பெண்ணும் அவரின் 4 வயது மகனும் சமூகநலத்துறையின் பாதுகாப்பில் இருப்பதாக Kota Darul Naim மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Suhaimi Othman தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



