பாதிப்புக்குள்ளாகும் நெல் வயல்கள் - விவசாயிகள் அச்சம்
- Shan Siva
- 17 Sep, 2025
கோத்தா பாரு, செப் 17: ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நெல் விதைப்பு
தொடங்கியதைத் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 15,000 ஹெக்டேருக்கு மேல் சாகுபடி செய்து வரும் 3,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, அடுத்த மாதம் தங்கள் நெல் விளைச்சல் 80 சதவீதம் குறையக்கூடும் என்று அஞ்சுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தா பாரு உத்தாரா,
கோத்தா பாரு செலாத்தான், பாசிர் பூத்தே, பாச்சோக், தும்பாட் மற்றும்
பாசிர் மாஸின் ஒரு பகுதி பாதிப்பு அபாயத்தில் இருப்பதாக கிளந்தான் விவசாயிகள் சங்கமான
பெசாக்கின் தலைவர் ஜுஹா இஸ்மாயில் தெரிவித்தார்.
விதைப்பு
செயல்முறை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடங்கியது, விதைப்பு நடைபெறும் போது நீர் வழங்கல் மிக முக்கியமானது.
இருப்பினும்,
கெமுபு பம்பிங் ஹவுஸிலிருந்து நீர் விநியோகத்தை
விவசாயிகளுக்கு இந்த முக்கியமான காலகட்டத்தில் கொண்டு செல்ல முடியவில்லை, இதனால் வயல்களில் அதிக புற்கள் நிறைந்திருப்பதாக
அவர் வருத்தம் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



