நிலத்தின் Status-ஐ மாற்றினேனா? ஹன்னா யோகாவல்நிலையத்தில் புகார்
- Shan Siva
- 20 May, 2026
கோலாலம்பூர், மே 20: செராஸ், தமான் செகாரில் இருக்கும் சொத்துகளை குத்தகை உரிமையிலிருந்து முழு உரிமைக்கு முறையற்ற வகையில் மாற்றியதாகக் கூறப்படும் அவதூறான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த அவதூறான குற்றச்சாட்டுகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்று சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
செராஸ், தமான் செகாரில் உள்ள குடியிருப்புகளின் நிலையை, ஹன்னா யோ குறுகிய காலத்தில் குத்தகை உரிமையிலிருந்து முழு உரிமைக்கு எப்படி மாற்றினார் என்று ஆய்வாளர் ஜஹாரா சுலைமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விவரிக்கும், பெர்டிவி ஊடகக் குழுவின் காணொளி மற்றும் செயற்பாட்டாளர் பத்ருல் ஹிஷாம் ஷஹாரினின் முகநூல் பதிவு ஆகியவற்றின் ஸ்கிரீன்ஷாட்களையும் யோ பகிர்ந்துள்ளார்.
டிவி பெர்டிவி காணொளியில், செராஸில் உள்ள தமான் செகாரில் இருக்கும் குடியிருப்புகளின் நிலையை, யோ குறுகிய காலத்தில் குத்தகை உரிமையிலிருந்து முழு உரிமைக்கு எப்படி மாற்றினார் என்று ஆய்வாளரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ஜஹாரா சுலைமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல மலேசியர்கள், குறிப்பாக மலாய்க்காரர்கள், தங்கள் சொத்துக்களின் நில நிலையை மாற்றுவதற்காக பல தசாப்தங்களாகக் காத்திருக்கிறார்கள் என்று ஜஹாரா கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



