அமைச்சர் வீடுகளில் கஞ்சா வளர்க்கச் சொன்னாரா?

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 14: அரசு ஊழியர்களை வீடுகளில் கஞ்சா வளர்க்குமாறு வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு ஊக்குவித்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலிப் படத்தை,  வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச் கடுமையாக மறுத்துள்ளது.

இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டுள்ள இந்தப் படத்தில், இந்த நடவடிக்கை ஒரு போலியான முன்னெடுப்பின் ஒரு பகுதி என்று குறிப்பிடும் வகையில், அமைச்சருடையது எனக் கூறப்படும் ஒரு புனையப்பட்ட மேற்கோள் இடம்பெற்றுள்ளது. இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து அமைச்சின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், இந்த கூற்றை அவதூறானது மற்றும் டிஜிட்டல் முறைகேட்டின் விளைவு என்று விவரித்ததோடு, இது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவறான உள்ளடக்கத்தைப் பகிர வேண்டாம் என்றும், துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வழிகளை மட்டுமே நம்புமாறும் பொதுமக்களுக்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *