பிலிப்பைன்ஸுக்கு டீசலா? - முற்றுப்புள்ளி வையுங்கள்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 13: மலேசியா பிலிப்பைன்ஸுக்கு டீசலை ஏற்றுமதி செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பிரதமர் அன்வர் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

மணிலாவிற்கு சமீபத்தில் அனுப்பப்பட்ட 329,000 பேரல்கள் டீசல், ஜொகூரின் பெங்கராங்கில் செயல்படும் வெளிநாட்டு எரிசக்தி நிறுவனமான விட்டோல் (Vitol) நிறுவனத்திடமிருந்து வந்ததாக அவர் கூறினார்.

அந்த டீசல் பெட்ரோனாஸ் (Petronas) நிறுவனத்திடமிருந்து வரவில்லை என்றும், பிலிப்பைன்ஸுக்கு விற்பனை செய்வதற்காக டீசலை அனுப்பும் ஒரு வெளிநாட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே விட்டோல் நிறுவனம் உள்ளது என்றும் அன்வர் கூறினார்.

 சர்வதேச ஊடக அறிக்கைகளுக்கு மாறாக, இந்த சரக்கு மலேசியாவிலிருந்து வரவில்லை என்று நேற்று தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழு (National Economic Action Council) கூறியது.

மலேசியாவிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு சுமார் 329,000 பேரல்கள், அதாவது 52 மில்லியன் லிட்டர் டீசல் அனுப்பப்பட்டதாக பிலிப்பைன்ஸ் செய்தி நிறுவனம் (Philippine News Agency) முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.

பிலிப்பைன்ஸுக்கு டீசல் வழங்குவதில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று பெட்ரோனாஸ் மறுத்துள்ளதாக 'தி எட்ஜ்' பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.

 பிலிப்பைன்ஸில் உள்ள எந்தவொரு தரப்பினருக்கும் டீசல் வழங்குவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திலும் தாங்கள் ஈடுபடவில்லை என்றும், உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே தங்களின் கவனம் தொடர்ந்து உள்ளது என்றும் அந்த தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

 நேற்று முகநூல் பதிவில், முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் இஷாம் ஜலீல், டீசல் எந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வந்தது என்று பிலிப்பைன்ஸிடம் கேட்குமாறும், இந்த விஷயத்தைப் பொதுமக்களுக்கு விளக்குமாறும் புத்ராஜெயாவைக் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *