டீசல் & ரோன் 97 பெட்ரோல் விலை 2 காசுகள் அதிகரிப்பு!
- Shan Siva
- 11 Sep, 2025
கோலாலம்பூர், செப் 11: தீபகற்ப மலேசியாவில் டீசல் மற்றும் RON97 பெட்ரோலின் சில்லறை விலை இன்று முதல்
செப்டம்பர் 17 ஆம் தேதி வரை இரண்டு காசுகள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
உலகளாவிய எண்ணெய்
விலை அதிகரிப்பு காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஒரு அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
இந்த
காலகட்டத்தில், RON97 இன் சில்லறை
விலை லிட்டருக்கு 3 ரிங்கிட் 18 காசாகவும் ஆகவும், டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் .90 காசாகவும் இருக்கும்.
RON95 இன் சில்லறை
விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசாகவே உள்ளது என்று அமைச்சகம் மேலும் கூறியது.
சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசலின் சில்லறை
விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 காசாகவே இருக்கும் என்றும் அது கூறியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



