“என்னால் முடிந்திருந்தால் எனது ஆயுளில் 10 ஆண்டுகளை அப்பாவுக்கு தந்திருப்பேன்” – உருக்கமாகப் பேசிய சாந்தனு
- Surendran Sumdraraj
- 29 Jun, 2026
சென்னை, ஜூன் 29 –
மறைந்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜை நினைவுகூர்ந்து, அவரது மகனும் நடிகருமான சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ள உருக்கமான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர் மற்றும் கதாசிரியரான பாக்யராஜ் அண்மையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் பாக்யராஜ் 50 ஆண்டுகள் நிறைவு செய்தபோது நடைபெற்ற விழாவின் காணொலியை சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் “முடிந்தால் மட்டும்…” என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார். அதில், “என்னால் முடிந்தால் என் வாழ்க்கையில் இருந்து பத்து ஆண்டுகளை எடுத்து என் அப்பாவுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது இன்னும் பல ஆண்டுகள் அவர் ரசிகர்களுக்கு சிறந்த திரைப்படங்களையும் கதைகளையும் வழங்கியிருப்பார். ஒரு ரசிகனாகவும், அவரிடம் கற்றுக்கொள்பவனாகவும் அதை நான் பார்த்து ரசித்திருப்பேன்,” என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



