காரில் புலியின் சடலம்!- மூவர் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 16: கோலாலம்பூரில் தங்கள் வாகனத்தில் புலியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை மூன்று பேரை கூட்டரசு சிறப்புப் படையான FR  கைது செய்தது.

பாதுகாக்கப்பட்ட விலங்கின் சடலத்தை வைத்திருக்க அனுமதிக்கும் சிறப்பு அனுமதிகளை மூவரும் சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010 (சட்டம் 716) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

கசானா ஒருங்கிணைந்த செயல்பாட்டின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனை, ஜொகூரில் உள்ள ஃபெல்டா தெங்காரோவில் உள்ள தனது பிரிவால் ஜொகூர் PERHILITAN உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதை FRU  மூத்த உதவி ஆணையர் ரோஸ்லி முகமட் யூசோஃப் உறுதிப்படுத்தினார்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் FRU இன் உளவுத்துறை குழு வாகனத்தை ஆய்வு செய்து, சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டதாக நம்பப்படும் ஒரு புலியின் சடலத்தைக் கண்டுபிடித்தது.

புலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், ஆறு துப்பாக்கிச் சூட்டு காயங்கள் மற்றும் ஒரு கண்ணியால் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து 28 முதல் 49 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேக நபர்களும் ஜொகூர் பெர்ஹிலித்தானால் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

புலியின் சடலம், ஒரு கார் மற்றும் நான்கு மொபைல் போன்கள் என மொத்தமாக RM294,007 மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *