பிக்பாஸில் அதிரடி - ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்!

top-news
FREE WEBSITE AD

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. 13 வாரங்கள் ஆன நிலையில் இன்னும் 2 வாரங்களில் இந்த சீசன் 9 நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது.இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் 9 போட்டியாளர்கள் இருந்த நிலையில் டிக்கெட் டு பினாலே அதாவது நேரடியாக போட்டியாளர் ஒருவர் பைனலுக்குள் நுழைவதற்கான டாஸ்க்குகள் இந்த வாரத்தில் தொடர்ச்சியாக நடந்து வந்தன.

இந்த சீசனை பொருத்த வரை பிக்பாஸ் வீட்டுக்குள் அடாவடியாகவும் திமிராகவும் ஆணவத்தின் மொத்த உருவமாகவும் எப்போதும் சக போட்டியாளர்களை அலட்சியப்படுத்தும் ஒரு நிலையிலும் விஜே பார்வதி செயல்பட்டு வந்தார். ஆரம்பம் முதலே அவரது செயல்பாடுகளும் பேச்சும் பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. இருப்பினும் அதுவும் ஒரு விளையாட்டு யுக்தி என்றே பலரும் கண்டுகொள்ளாமல் விட்டனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் பிக்பாஸ் சொல்லும் அறிவுரைகளையே கண்டுகொள்ளாமல் பார்வதி அலட்சியம் காட்டினார். விஜய் சேதுபதி பேசிக்கொண்டிருக்கும் போது பலவிதமான உடல்மொழியில் அவரையும் இன்சல்ட் செய்தார். இதனால் பலமுறை கடுப்பான விஜய் சேதுபதி, இப்படி பண்ணாதீங்க பார்வதி என்று திட்டியிருக்கிறார். எனினும் பார்வதி திருந்தவில்லை.

இதற்கிடையே சக போட்டியாளர் கம்ருதீனை காதல் மொழி பேசி மயக்கிய பார்வதி தனது இஷ்டப்படி எல்லாம் அவரை ஆட்டிப் படைத்தார். கானா வினோத்,சபரி,திவ்யா கணேஷ் போன்றவர்கள் பார்வதியுடன் சேராதே என்று பலமுறை எச்சரித்தும் கம்ருதீன் கேட்காமல் போனதன் விளைவால் இப்போது அதற்கான மோசமான பலன் கம்ருதீனுக்கு கடைசியில் கிடைத்து விட்டது.

இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக போட்டியாளர்கள் கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட தகவல் இப்போது வெளியாகி உள்ளது. நேற்று முன் தினம் பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பினாலே போட்டியில் கார் டாஸ்க் நடந்தது. இதில் காருக்குள் இருந்த சாண்ட்ராவை பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் சேர்ந்து தகாத வார்த்தைகளில் தரக்குறைவாகப் பேசினர்.

அவர்கள் இருவரும் சேர்ந்துக்கொண்டு திட்டமிட்டு காருக்குள் இருந்த சாண்ட்ராவை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து உதைத்து காருக்கு வெளியே தள்ளி விட்டனர். புல் தரையில் விழுந்த அவருக்கு பேனிக் அட்டாக் ஏற்பட்டது. சாண்ட்ரா உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். இது பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி கம்ருதீன் பார்வதி இருவரையும் ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார். இது பிரமோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *