ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் மறுஆய்வுக்கு அனுப்ப ஐகோர்ட் உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுத்து, மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதால் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, படத் தயாரிப்புக் குழு இந்த வாரியத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, ஜனவரி 9 அன்று, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்தார். அத்துடன், 'ஜனநாயகன்' படத்திற்கு எந்தத் தடையுமின்றி உடனடியாகச் சான்றிதழ் வெளியிட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மத்திய தணிக்கை வாரியம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை ஜனவரி 20-க்கு ஒத்திவைத்தது. இந்த இடைக்காலத் தடையை உடனடியாக நீக்கக் கோரி, படத் தயாரிப்புக் குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனினும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திலேயே அணுகுமாறு திட்டவட்டமாக அறிவுறுத்தி, மனுவை முடித்து வைத்தனர்.

அதன்படி, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் ஜனவரி 20 அன்று விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "படத்தை மறுஆய்வுக்கு அனுப்பும் முடிவு ஜனவரி 5-ஆம் தேதியே 'இ-சினி பிரம்மாண்' இணையதளம் வாயிலாக தயாரிப்புக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்.

சுந்தரேசன் மேலும் வாதிடுகையில், "தயாரிப்புக் குழு சான்றிதழ் கேட்டு ஜனவரி 6-ல் வழக்குத் தொடங்கி, ஜனவரி 9-ல் சாதகமான உத்தரவைப் பெற்றது. கேட்காத பரிகாரத்தைத் தனி நீதிபதி வழங்கியது சட்டத்துக்குப் புறம்பானது" என்றார். படத் தயாரிப்புக் குழு சார்பில் மூத்த வழக்கறிஞர்களான சதீஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.

தயாரிப்புக் குழு வழக்கறிஞர்கள், "தனி நீதிபதி தீர்ப்பை வழங்கிய உடனேயே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. அத்துடன், தணிக்கை வாரியம் வெளிப்படையாகச் செயல்படவில்லை" என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் முக்கியக் கருத்துக்களை முன்வைத்தனர். நீதிபதிகள், "நீதிமன்ற நடைமுறைகளை ஒரே நாளில் முடித்து தீர்வு கோருவது ஏற்க இயலாது. சான்றிதழ் பெறும் முன் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யக் கூடாது. இயற்கை நீதியைப் பின்பற்றியே எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியும்" என்று சுட்டிக்காட்டினர். இதனையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜன நாயகன்' படத்தில் மத பிரச்னைகளை தூண்டும் காட்சிகள் இருப்பதால் CBFC மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. U/A சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக CBFC தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வு இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *