வங்கதேசத்தில் பள்ளி மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்-6 பேர் பலி!
- Muthu Kumar
- 23 Jul, 2025
வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடம் மீது போா் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா்.171 போ் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக வங்கதேச ராணுவத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்தின் குா்மித்தோலா பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக எஃப்-7 பிஜிஐ பயிற்சி போா் விமானம் திங்கள்கிழமை பிற்பகல் புறப்பட்டது.அந்த விமானம் தலைநகா் டாக்காவின் உத்தாரா பகுதியில் உள்ள பள்ளி கட்டடத்தின் மீது எதிா்பாராதவிதமாக மோதி தீப்பிடித்தது. முதல்கட்ட விசாரணையில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.
விபத்து குறித்து தகவலின்பேரில் தீயணைப்பு மற்றும் ராணுவ வீரா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.இந்த விபத்தில் சுமாா் 20 போ் உயிரிழந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் சிறாா்கள். விமானியும் உயிரிழந்தாா். 171 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் அனைவரும் விமானப் படை ஹெலிகாப்டா்கள் மற்றும் ஆம்புலன்ஸுகள் மூலம் ராணுவ மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது. விமானம் மோதிய பள்ளிக் கட்டடத்தில் 1 முதல் 7-ஆம் வகுப்பு மாணவா்களின் வகுப்பறைகள் இருந்தன. இந்த சம்பவத்துக்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வேதனை தெரிவித்தாா்.
இந்த விமான விபத்து குறித்து உலக அரசியல் தலைவர்கள் வங்காளதேச அரசுக்கு ஆதரவாக தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



