பள்ளிக்கு வெளியே சண்டை! - 13 சிறுவர்கள் கைது

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு,  ஏப் 12: ஸ்கூடாய், பண்டார் செலாசா ஜெயாவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளிக்கு வெளியே நேற்று ஏற்பட்ட சண்டை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, இரண்டு பெண்கள் மற்றும் 13 சிறுவர்களை காவல்துறையினர் காவலில் வைத்துள்ளனர்.

மதியம் 12.45 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, 12 முதல் 37 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களை நூசா பெஸ்தாரி மற்றும் இஸ்கண்டார் புத்ரியில் காவலில் வைத்ததாக இஸ்கண்டார் புத்ரி காவல் நிலையத் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.

பள்ளி நேரம் முடிந்த பிறகு சந்தேக நபர்களில் ஒருவர் அறையப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சண்டை தொடங்கியதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.  விசாரணைக்கு வசதியாக, அந்தப் பெண்கள் மூன்று நாட்களுக்கும், அனைத்து சிறுவர்களும் இன்று முதல் நான்கு நாட்களுக்கும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் 147 மற்றும் 323 பிரிவுகளின் கீழ், முறையே கலவரம் செய்தல் மற்றும் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.  முன்னதாக, இந்தச் சம்பவம் தொடர்பான 29 வினாடி காணொளி ஒன்று ஃபேஸ்புக்கில் வைரலானது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *