“போலி முகப்பிடங்கள்” நடவடிக்கைகளில் தாய், மகள் உட்பட எண்மர் கைது!
- Muthu Kumar
- 17 Sep, 2025
கோலாலம்பூர், செப் 17-
போலி முகப்பிடங்கள்" கும்பலுடன் கூட்டுச் சேர்ந்து, அந்நிய நாட்டவர்களை நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய விட்ட குடிநுழைவு இலாகா அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) எண்மரை கைது செய்திருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி இதுவரையில் நான்கு மாநிலங்களில் ஏககாலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்ஸ் ரெந்தாஸ் நடவடிக்கைகளில் கைதாகியுள்ள அந்த எண்மரில் ஒரு தாயும் அவரின் மகளும் அடங்குவர்.
கைதாகியுள்ள அனைத்து குடிநுழைவு இலாகா அதிகாரிகளும், 'போலி முகப்பிடங்கள் கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, முறையாக சோதனை செய்யாமல் அந்நிய நாட்டவர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதித்த சம்பவத்தில் முக்கிய பங்கை ஆற்றி அதன் மூலம் லட்சக் கணக்கான பணத்தை லஞ்சமாகப் பெற்றதாக சந்தேகிக்கப்படுவதாக, எம்ஏசிசி உளவுப் பிரிவின் மூத்த அதிகாரி சைஃபுல் எஸால் அரிஃபின் தெரிவித்தார்.
நடவடிக்கையில் ஈடுபட்ட நெகிரி செம்பிலான் மாநில எம்ஏசிசி அதிகாரிகள் சோதனை
நடவடிக்கையின்போது, சுமார் 80 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள தங்க ஆபரணங்களையும் கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.
அதோடு, சுமார் 20 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள தொலைத்தொடர்பு சாதனத்தையும் கைப்பற்றிய அதிகாரிகள், ஒரு லட்சத்து 6 ஆயிரம் வெள்ளி மதிப்புடைய இரண்டு கார்கள் மற்றும் 20 ஆயிரம் வெள்ளி மதிப்புடைய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்ததாக சைஃபுல் கூறினார்.இந்நிலையில், ஓர் அதிகாரியினால், தாபோங் ஹஜி மற்றும் அமானா சஹாம் பூமிபுத்ராவில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்ட சுமார் 10 லட்சம் வெள்ளியும் முடக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
தமது மனைவி, பிள்ளைகள் மற்றும் தமது சொந்த தாபோங் ஹஜி கணக்கில் இந்த குடிநுழைவு அதிகாரி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணத்தை முதலீடு செய்திருப்பதாக, எம்ஏசிசி நேற்றுமுன்தினம் கூறியிருந்தது.இதை தவிர்த்து, அந்த அதிகாரி அமானா சஹாம் பூமிபுத்ராவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட லஞ்சப் பணத்தை முதலீட்டு வைப்புத் தொகையாக வைத்திருப்பதையும் எம்ஏசிசி கண்டு பிடித்திருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



