ஜொகூரில் ஆசியான் டிஜிட்டல் உள்ளடக்க மாநாடு 2025 தொடக்கம்!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர்பாரு, செப்.4-

ஜொகூர் மாநிலம் பெர்சடா இன்டர்நேஷனல் கான்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற ஆசியான் டிஜிட்டல் உள்ளடக்க மாநாடு 2025 திறப்பு விழாவை ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி நேற்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

தனது உரையில் அவர், இந்நிகழ்ச்சி ஜொகூரை ஆசியான் பிராந்தியத்துக்கான டிஜிட்டல் உள்ளடக்கத்தின் முக்கிய வாயிலாக உயர்த்தியதோடு, புதிய முதலீடுகள், உயர்தர வேலைவாய்ப்புகள் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டார். மேலும், ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் மாநிலத்தின் வர்த்தகம், முதலீடு மற்றும் திறன் வளர்ச்சியை விரைவுபடுத்தும் முக்கிய மாற்றமாக அமையும் என வலியுறுத்தினார்.

அவர், "நீல பொருளாதாரம்” மற்றும் "பச்சை பொருளாதாரம்" ஆகியவற்றைத் தொடர்ந்து “ஆரஞ்சு பொருளாதாரம்” எனப்படும் படைப்பாற்றல் மற்றும் கலாச்சார துறைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இசை, திரைப்படம், அனிமேஷன், விளையாட்டுத்துறை மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் போன்றவை இன்றைய உலகளாவிய போட்டியில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன என்றும், ஜொகூர் இத்துறையில் முன்னோடி நிலையை அடைய வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கான உதாரணமாக தென் கொரியாவின் கே-பாப் இசை மற்றும் ஜப்பானின் அனிமேஷன் தொழில் பில்லியன் டாலர் அளவில் வளர்ந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.மலேசியாவின் 'உபின் மற்றும் இபின்”, “ஏஜென் அலி" போன்ற படைப்புகள் சர்வதேச அளவில் மக்களின் மனதை கவர்ந்துள்ளன. அதுபோல். ஜொகூரில் அமைந்துள்ள இமாஜினேடிவ் இலுஷன்ஸ் மற்றும் காமன் எக்ஸ்ட்ராக்ட் போன்ற நிறுவனங்கள் நாட்டின் டிஜிட்டல் பயணத்தில் முன்னோடியாக உள்ளன.

மேலும், இஸ்கந்தார் மலேசியா ஸ்டுடியோஸ் உலகத் தரப்படுத்தப்பட்ட தயாரிப்புகளான மார்கோ போலோ, கிரேசி ரிச் ஏஷியன்ஸ் மற்றும் ஆசியாஸ் காட் டேலன்ட் போன்றவற்றை நடத்தி, ஜொகூரின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜொகூரின் “விசிட் ஜொகூர் 2026" நோக்கத்துடன் இணைந்து, இவ்விழா மாநிலத்தின் இயற்கை அழகுகள், கலாச்சாரம்
மற்றும் ரிசத் துறையை உலகளவில் அறிமுகப்படுத்தும் சிறந்த வாய்ப்பாக அமையும் என மந்திரி பெசார் வலியுறுத்தினார். வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் அனைவரும் மெர்சிங், டெசாரு கடற்கரைகள், ஜொகூர் பிரீமியம் அவுட்லெட், சுல்தான் இப்ராஹிம் மைதானம் போன்றவற்றை நேரில் அனுபவிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி, முடிவில், மந்திரி பெசார் எம்டெக் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்ததோடு, ஆசியான் டிஜிட்டல் உள்ளடக்க மாநாடு 2025ஐ அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *