கண்ணதாசன், எம்.எஸ்.வி.யைப் புகழ்ந்த இளையராஜா
- Surendran Sumdraraj
- 25 Jun, 2026
சென்னை, ஜூன் 25 –
கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமான காணொலி ஒன்றை வெளியிட்டு இருவருக்கும் புகழாரம் சூட்டியுள்ளார்.
அந்தக் காணொலியில், “தமிழின் கவிதைக்கும் இசைக்கும் அழியாப் புகழ் சேர்த்தவர்கள் கண்ணதாசனும் எம்.எஸ்.வியும். அவர்களின் சொற்களும் சுரங்களும் என்றும் நம் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்,” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் தினமும் இசையிலேயே இருப்பதால் அவர்களை ஒருநாளும் நினைக்காமல் இருக்க முடியாது. அவர்கள் படைத்த இசையும் பாடல்களும் தலைமுறைகளைத் தாண்டி வாழும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



