ஜொகூரின் குளுவாங்கில் கொய்யாத்தோட்டமொன்றை முற்றிலும் அழித்த காட்டு யானைகள்!
- Muthu Kumar
- 03 Oct, 2024
குளுவாங், அக். 3-
ஜொகூரின் குளுவாங், ஜாலான் ரெங்காமில் கொய்யாத்தோட்டமொன்றை காட்டு யானைகள் முற்றாக அழித்துள்ளன. கொய்யாப் பழங்களைத் தின்பதற்காக கடந்த இரண்டு வாரங்களாக காட்டு யானைகள் தமது தோட்டத்திற்குள் நுழைந்து வருவதாக 56 வயதான தோட்டத்தின் உரிமையாளர் சின் சீ கியோங் தெரிவித்தார்.
6.5ஹெக்டர் பரப்பளவு கொண்ட தமது தோட்டத்திற்குள் நுழைந்த யானைகள், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களைச் சேதப்படுத்தியுள்ளன. தோட்டத்தைச் சுற்றிலும் மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்த போதிலும், அதனை இடித்துத் தள்ளிவிட்டு யானைகள் உள்ளே நுழைகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் 270 மரங்களிலிருந்து இருபத்து நான்கு டன் கொய்யாப் பழங்களை அவை தின்றுள்ளன. இருநூறு வாழை மரங்களையும் அந்த விலங்குகள் சேதப்படுத்தியுள்ளன. இதனால் ஒரு லட்சம் வெள்ளி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சின் கூறியுள்ளார். அவருடைய தோட்டத்தில் பதினெட்டாயிரம் கொய்யா மரங்கள் உள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *