இந்தோனேசியாவில் காட்டுத்தீ: இரு பகுதிகளில் அவசரகால நிலை!
- Muthu Kumar
- 24 Jul, 2025
ஜாகர்த்தா, ஜூலை 24-
இந்தோனேசியாவில் வறட்சியினால் தீ விபத்துக்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, காடுகள் மற்றும் நிலத் தீ காரணமாக அந்நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள சோலோக், லிமாபுலு பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளன.
சோலோக்கில், 14 மாவட்டங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக மேற்கு சுமத்ரா மாநிலத்தின் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் கூறியது. மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கருதப்படும் ரியாவ், தெற்கு சுமத்ரா மாநிலங்களில், தீயை அணைக்கும் முயற்சிகளுக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சவாலான நிலப்பரப்பு, உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக தீயை அணைக்கும் முயற்சிகள் கடினமாகி உள்ளன.இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து ஜூலை 19ஆம் தேதிவரை ஒன்பது மாநிலங்கள், நகரங்களில் 140.8 ஹெக்டர் பரப்பளவை உள்ளடக்கி குறைந்தது 64 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.மற்றொரு நிலவரத்தில், விபா புயல் ஏற்படுத்திய தாக்கத்தில், வட தாய்லாந்தில் உள்ள நான் எனும் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது.
மழை தொடர்ந்து பெய்ததால், மக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு பெரும் அவதிக்குள்ளாகினர்.நேற்று, வியட்நாமின் வட
மாநிலங்களான நின் பின், தான் ஹோவாவாவில் கரையைக் கடந்த இப்புயல், மணிக்கு 74 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்தத்தை ஏற்படுத்தியதாக வியட்நாமின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலால் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து, வட தாய்லாந்தின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில்,நான் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு அதிகமாகி உள்ளது. இதனால், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புயலின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பேரிடர் சூழ்நிலைகள் குறித்து, மக்கள் விழிப்புடனும் தயார் நிலையிலும்
இருக்குமாறு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



