என் மீது போலீஸ் புகாரா? தாராளமாகச் செய்யுங்கள்!
- Muthu Kumar
- 16 Aug, 2025
கப்பளா பத்தாஸ், ஆக. 16
பினாங்கின் கப்பளா பத்தாஸில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஒன்று கூடியதன் மூலம் பொது ஒழுங்கை சீர்குலைத்ததாக கூறப்படுவது மற்றும் போலீசாரின் உத்தரவை மீறியதற்காக சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலே சவால் விட்டிருக்கின்றார்.
தம் மீது புகார் செய்யப்பட்டால், போலீசாரின் விசாரணைக்குத் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அக்மாலுக்கு எதிராக நாடு முழுமையிலும் போலீஸ் புகார்களை செய்யுமாறு தமது கட்சியின் இளைஞர் பிரிவுகளுக்கு, ஜசெக தலைமைச் செயலாளர் லோக் சியூ ஃபூக் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்து அக்மால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"உங்களைக் கண்டு எனக்கு பயமா? சிறிதளவும் இல்லை. எனக்கு எதிராக போலீஸ் புகார்களை செய்யப் போகின்றீர்களா? தாராளமாகச் செய்யுங்கள். முழு ஒத்துழைப்பு வழங்க நான் தயார்" என்று. நேற்று பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு முகநூல் பதிவில் அக்மால் கூறினார்.
“கப்பளா பத்தாஸில் உள்ள ஒரு வன்பொருள் கடைக்கு வெளியில் கூட்டம் அமைதியாக நடந்தது. அதில் உங்கள் ஜசெக தலைவர்களின் ஒருவரின் புகைப்படமும் மிதிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.தேசியக் கொடியை தலைகீழாக பறக்க விட்டதாகக் கூறப்படும் அக்கடை உரிமையாளருக்கு எதிராக பகடிவதை செய்யும் மற்றும் மிரட்டும் தோரணையில், அக்மால் ஒரு கூட்டத்தினரை அங்கு கூட்டிச் சென்றிருக்கின்றார் என்று லோக் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டது. குற்றவியல் மிரட்டல் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல் ஆகியவற்றுக்காக அக்மாலுக்கு எதிராக போலீசில் புகார் செய்யுமாறு நாடு முழுமையிலும் உள்ள ஜசெக இளைஞர் பிரிவுகளுக்கு தாம் உத்தரவிட்டதாக லோக் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



