இராணுவ ஊழல் விவகாரம்! மேலும் ஒரு மூத்த அதிகாரியிடம் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், ஜன 10: மலேசிய ஆயுதப்படையின் மற்றொரு மூத்த அதிகாரியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 சொத்து கொள்முதலுக்கான நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 50 வயதுடைய சம்பந்தப்பட்ட நபர் மீது MACC தனது விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இராணுவ கொள்முதல் கும்பல் என்று கூறப்படும் ஒரு சம்பவம் குறித்த விசாரணையில் உதவுவதற்காக ஊழல் தடுப்பு நிறுவனத்தால் சம்மன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பல அதிகாரிகளில் இந்த நபரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

ஆயுதப்படைகளில் உள்ள மற்ற மூத்த அதிகாரிகள்" மீது விசாரணை நடத்தப்படுவதாக MACC தலைவர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார், ஆனால் மேலும் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

இந்த விசாரணையின் மூலம் ஆயுதப்படைகளின் தலைவராக பொறுப்பேற்கவிருந்த இராணுவபப்டையின் முன்னாள் தலைவர் ஹபிசுதீன் ஜந்தன் மற்றும் விசாரணைக்கு உதவ அவரது இரண்டு மனைவிகள் கைது செய்யப்பட்டனர்.

மூத்த இராணுவ அதிகாரி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இராணுவ கொள்முதல் ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய 26 நிறுவனங்களின் உரிமையாளர்களையும் MACC விசாரித்து வருகிறது.

2023 ஆம் ஆண்டு முதல் பல நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்து அதிக மதிப்புள்ள இராணுவ ஒப்பந்தங்களை மீண்டும் மீண்டும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

MACC, RM6.9 மில்லியன் தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது1

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *