இராணுவ கொள்முதல் முறைகேடு விசாரணை: RM 24 லட்சம் ரொக்கம் பறிமுதல் – எம்ஏசிசி
- Shan Siva
- 07 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 7: இராணுவ கொள்முதல் ஒப்பந்தங்களில் ஏற்பட்டதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் போது, 24 லட்சம் ரிங்கிட் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACCயின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த வழக்குடன் தொடர்புடைய ஒருவர் அந்த பணத்தை ஒரு
வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்கு மாற்ற முயன்றபோது, இன்று
காலை அது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த ரொக்கம் தற்போது நடைபெற்று வரும்
விசாரணையுடன் நேரடியாக தொடர்புடையது என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாகவும்,
அவர் கூறினார்.
மூத்த இராணுவ அதிகாரி ஒருவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 26
நிறுவனங்களை உள்ளடக்கிய கொள்முதல் ஒப்பந்தங்கள் தற்போது
விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த
அதிகாரியின் உறவினர்கள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்
சுமார் 40 நிறுவனங்களையும் விசாரணை விரிவுபடுத்தி
உள்ளதாக எம்ஏசிசி தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல
பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை சில நிறுவனங்கள் பெற்றுள்ளதாகவும் MACC
தெரிவித்துள்ளது.
முன்னதாக, மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு லஞ்சம்
வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 17 நிறுவன இயக்குநர்களுக்கு எதிராக,
ஐந்து நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக
எம்ஏசிசி நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



