அனைத்து குடிமக்களுக்கும் RM 600 வழங்கப்படுமா?! - அது தவறான தகவல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 17: நிதி நிலையைப் பொருட்படுத்தாமல் அனைத்து மூத்த குடிமக்களும் மாதாந்திர நலத்திட்ட உதவியாக RM600 பெறத் தகுதியுடையவர்கள் என்று குறிப்பிடும் வைரலான வாட்ஸ்அப் செய்தியை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

இந்த உதவி வறுமைக் கோட்டுக்குக் கீழ் RM1,198  மாத வருமானம் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே என்று பிரதமரின் உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.இந்த உதவி குறிப்பாக மலேசிய மூத்த குடிமக்கள் குழுவிற்கு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த நிதி உதவியும் இல்லாமல் சொந்தமாக வாழும் மூத்த குடிமக்களுக்கானது என்று அவர் எஃப்எம்டியிடம் கூறினார்.

வைரல் செய்தி உண்மையா என்றும், அனைத்து மூத்த குடிமக்களும் ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்திடமிருந்து RM600 பெற தகுதியுடையவர்களா என்றும் கேள்விகள் எழுந்த நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சமூக நலத்துறையின்படி, “கடின ஏழை” என்பது RM1,198 க்கும் குறைவான மாத வருமானம் கொண்ட குடும்பங்களைக் குறிக்கிறது.

மாதாந்திர மொத்த வருமானம் வரம்பை விடக் குறைவாக உள்ள குடும்பங்களின் மூத்த குடிமக்கள் மட்டுமே உதவிக்கு தகுதியுடையவர்கள். குழந்தைகள் இல்லாதவர்கள், அவர்கள் சொந்தமாக வாழ்ந்தாலும் அல்லது உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் வாழ்ந்தாலும், அவர்களும் தகுதியுடையவர்கள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *