மீண்டும் அதிமுகவில் இணையும் செங்கோட்டையன்? சூசகமாக தகவல்!
- Muthu Kumar
- 06 Nov, 2025
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே சமீபத்தில் பிரிந்து கிடக்கும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைைய வேண்டும் எனவும் அப்படி இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்றும் செங்கோட்டையன் இபிஸ்க்கு கெடு விதித்தார். இதனைத் தொடர்ந்து அவரை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கி உத்தரவிட்டார். அதன் பிறகு செங்கோட்டையன் மௌனம் காத்து வந்த நிலையில் சமீபத்தில் பசும்பொன்னில் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியவரை சந்தித்திருந்தார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் மொத்தமாக அதிமுகவிலிருந்து செங்கோட்டையனை நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உதவியை செங்கோட்டையன் நாடியுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட 250 பக்க கடிதத்தில் பல முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. அதை பொதுவெளியில் சொல்ல முடியாது என்ற செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுகவிலிருந்து தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக புதிய தகவலை வெளியிட்ட அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள், நல்லதே நடக்கும் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



