வெ.15 லட்சம் அவதூறு வழக்கு தொடர்வேன் அமைச்சர் சிம்முக்கு எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 5-

ஜசெகவின் துணைத் தலைமைச் செயலாளர் ஸ்டீவன் சிம்முக்கு கோரிக்கைக் கடிதமொன்றை சுங்கை பூலோ பாஸ் தலைவர்
ஸஹாருடின் முகமது சார்வு செய்துள்ளார். ஆயுதப் படையில் சீன அதிகாரி ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது குறித்து ஸஹாருடின் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார். அவரின் அக்கருத்தை மனிதவள அமைச்சரான சிம் தமது முகநூல் பக்கத்தில் கண்டித்திருந்தார்.

சிம்மின் அந்த அறிக்கை தம்மை அவதூறு செய்யும் வகையில் இருப்பதாகக் கூறி அவருக்குக் கோரிக்கைக் கடிதத்தை ஸஹாருடின் அனுப்பி வைத்துள்ளார்.ஜூலை 3ஆம் தேதியிடப்பட்ட அக்கடிதம் நூர் மைடின் அண்ட் கோ சட்டநிறுவனம் மூலம் சிம்முக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிம் தம்முடைய அவதூறான கருத்துகளை மீட்டுக் கொண்டு பகிரங்கமான முறையில் மன்னிப்பு கேட்காவிடில், அவரிடமிருந்து பதினைந்து லட்சம் வெள்ளி கோரி மானநட்ட வழக்கு தொடரப்படும் என்று அக்கடிதத்தில் ஸஹாருடின் எச்சரித்துள்ளார்.

உங்களின் அவதூறான குற்றச்சாட்டுக்கு பதினைந்து லட்சம் வெள்ளி இழப்பீடு கோருவது நியாயமான ஒன்று என்று எங்களின் கட்சிக்காரர் கருதுகிறார் என்று ஸஹாருடினின் வழக்கறிஞர்கள் கூறினர்.
கோரிக்கைக் கடிதம் கிடைக்கப் பெற்ற ஏழு நாட்களுக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில், அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேஜர்-ஜெனரல் பதவியிலிருந்த ஜானி லிம் என்பவர் அண்மையில் லெஃப்டினண்ட் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அப்பதவிக்கு மலேசிய சீன சமூ கத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.இது பற்றி கருத்துரைத்திருந்த ஸஹாருடின், அடுத்த முப்பது அல்லது நாற்பது  மலேசியாவுக்கு சீனர் ஒருவர் பிரதமராக வருவதற்கு சாத்தியம் உள்ளது என்று தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஸஹாருடினின் அக்கூற்று இனவாதமானது என்று சிம் உட்பட பல தரப்பினர் சாடியிருந்தனர். அவர் மீது போலீசார் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

Saharudin Mohamad menghantar surat tuntutan kepada Menteri Sumber Manusia, Steven Sim, menuntut permohonan maaf dan ganti rugi RM1.5 juta atas dakwaan kenyataan fitnah. Isu berpunca daripada komen kontroversi Saharudin mengenai pelantikan pegawai tentera berbangsa Cina.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *