தேமுவில் நீடிப்பதா? மசீசவே முடிவு செய்யும்!
- Muthu Kumar
- 07 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 7-
தேசிய முன்னணியில் தொடர்ந்து நீடித்து வருவதா என்பதை முடிவு செய்யக்கோரி மசீசவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் வேளையில், தனது எதிர்காலம் குறித்து அக்கட்சியே தனியாக முடிவெடுக்கும் என்று மசீச தலைவர் வீ கா சியோங் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.மசீசவின் தலைவர் எனும் வகையில் சரியான தருணத்தில் ஒரு முடிவெடுப்பேன்.
அதற்கு முன்பாக, கட்சி உறுப்பினர்களிடமும் ஆதரவாளர்களிடமும் இயன்ற வரையில் நான் கலந்தாலோசனை நடத்தப் போகிறேன் என்று விஸ்மா எம்சிஏ கட்டடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.தேசிய முன்னணியில் மசீச நீடிப்பதா அல்லது அதிலிருந்து வெளியேறுவதா என்பதை மற்றவர்கள் எங்களுக்குக் கூறக் கூடாது. இது அவர்களின் கட்சியல்ல. என்னுடைய கட்சி. எங்களுக்கு இது பற்றி இன்னும் நன்றாகத் தெரியும் என்றார் அவர்.
ஒற்றுமை அரசாங்கத்தில் மசீசவின் செல்வாக்கு தேய்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், தேசிய முன்னணியிலிருந்து அக்கட்சி வெளியேற வேண்டும் என்று கட்சித் தொண்டர்களும் அரசியல் எதிரிகளும் ஒருசேர வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அக்கூட்டணியிலிருந்து மசீச விலகுமா என்று செய்தியாளர்கள் வினவியதற்கு வீகா சியோங் அவ்வாறு தெரிவித்தார்.
மசீசவின் 191 தொகுதிகளும் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் அக்கட்சியின் பொதுப்பேரவையில் கட்சியின் எதிர்காலம் பற்றி தீர்மானிக்க விவாதம் நடத்துவார்கள் என்று கடந்த ஜூன் மாதம் அவர் தெரிவித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



