CARTEL குழுக்களை அகற்றியதன் வழி பில்லியன் கணக்கான ரிங்கிட் மிச்சமாகியுள்ளது! - அன்வார்
- Shan Siva
- 24 Jan, 2026
செபராங் ஜெயா, ஜன 24: கார்டெல்கள் எனப்படும் பெரும் பெரும் நிறுவனங்களின்
குழுக்களை அகற்றுவதன் மூலமும், கொள்முதல் நடைமுறைகளைச் சீர்திருத்துவதன் மூலமும் அரசாங்கம் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை
மிச்சப்படுத்தியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த கொள்முதல்
சீர்திருத்தங்கள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும்
அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கியது என்றும், அதிக நிதியை மக்களிடம் திருப்பி அனுப்ப
அனுமதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்பு தொழில்
கொள்கையிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுவிட்டோம், எனவே பாதுகாப்பு
சொத்துக்களுக்கு கூட, அரசாங்க கொள்முதல் வெளிப்படைத்தன்மை,
உள்ளூர் திறன் மேம்பாடு மற்றும் செலவுத் திறன்
ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ரூ
உள்ளூர் நிபுணத்துவம்
இல்லாத நிலையில் பாதுகாப்பு சொத்துக்களை
வாங்கினாலும், மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் மற்றும்
உள்ளூர் நிறுவனங்களுக்கு தொழில்களை மேம்படுத்த இடம் கொடுக்க வேண்டும் என்று அவர்
இன்று இங்கு புதிய செபராங் ஜெயா மருத்துவமனையைத் தொடங்கி வைத்து தனது உரையில் இவ்வாறு
கூறினார்.
பாதுகாப்பு, சுகாதாரம், பொதுப்பணி அல்லது உணவு விநியோகம் என எதுவாக இருந்தாலும்,
நாம் கார்டெல்களை சார்ந்து இருக்கக்கூடாது,
ஏனெனில் இறுதியில் மக்கள் உயர்த்தப்பட்ட
விலைகளால் அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



